Take a fresh look at your lifestyle.

மம்முட்டி படத்தை இயக்கும் கௌதம் மேனன்!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தெரியாத நிலையில் அவர் அடுத்த படத்தை இயக்கத் தயாராகி விட்டார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ள நிலையில், இப்படம் மலையாளத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் மலையாளத்தில் உருவானாலும் தமிழிலும் டப் செய்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் ஹீரோவாக பிரபல மலையாள நடிகர் மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பதுடன் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பெயரிப்படாத இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. முதலில் மம்முட்டி மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

இயக்குநர் கௌதம் மேனன்,  மம்முட்டி மற்றும் நயன்தாரா ஆகிய மூவரும் ஒரே படத்தில் இணைவதை அடுத்து இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

– தேஜேஷ்