Take a fresh look at your lifestyle.

ரஜினியின் ‘கூலி’ பட கெட்டப்பை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. மேலும், இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ‘கூலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. அண்மையில், இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதில், தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘கூலி’ திரைப்படம் பற்றிய அப்டேட் ஒன்றினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கும் என பதிவிட்டுள்ளார்.

அதோடு, மேக்கப் டெஸ்ட் எடுத்த போது நடிகர் ரஜினிகாந்த் உடன் தான் எடுத்த செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் இணைத்துப் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.