Take a fresh look at your lifestyle.

மன்னராக நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்!

நடிகை கே.ஆர்.விஜயா

“எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன்.

அவர் தன்னுடன் நடிப்பவர்களுடன் மிகவும் அக்கறையாக நடந்து கொள்வார். மற்றவர்களை மதித்துப் பழகுவதில் சிறந்தவராக விளங்கியதால், அவருக்கு அதிகமான நண்பர்கள்.

‘சேரமான் பெருமாள்‘ என்ற படத்தின் கதை விவாதம் முடிந்து லொகேஷன், நடிகர், நடிகையர்களை எல்லாம் தேர்வு செய்த பின் படப்பிடிப்பு துவங்குகிற நேரத்தில் தேர்தல் வந்துவிட்டது.

அதில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வர் ஆனதால் அந்தப் படம் அப்படியே நின்றுவிட்டது. அதில் அவருடன் நான் கதாநாயகியாக நடிக்க இருந்தேன். என்ன காரணத்தாலோ படம் பிறகு எடுக்கப்படவில்லை.

அந்தப் படத்தின் கதைப்படி- சேரன் பெருமாளாக நடிக்க இருந்தார் எம்.ஜி.ஆர். அவரை மன்னராக்கி முடிசூட்டுவது தான் கிளைமாக்ஸ் காட்சியாக எடுக்கப்பட இருந்தது.

ஆனால் உண்மையிலேயே எம்.ஜி.ஆர் முடிசூடி முதல்வராகப் பொறுப்பேற்று சாதனை புரிந்தார்”

– கே.ஆர்.விஜயா அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.