Take a fresh look at your lifestyle.

‘லாஸ்ட் லேடீஸ்’ எனத் தலைப்பு மாறிய ‘லாபதா லேடீஸ்’!

கடந்த மார்ச் மாதம் கிரண் ராவ் இயக்கத்தில் நித்தன்ஷி கோயல், ஸ்பார்ஷ் ஸ்ரீவத்சவ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லாபதா லேடீஸ்’.

இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, 48வது டொரண்டோ சர்வதேச திரைப்படத் விழாவில் திரையிடப்பட்டது.

அதன்பின், திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற லாபதா லேடீஸ் திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் மற்றும் அமீர்கானும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதையடுத்து 97-வது ஆஸ்கர் விருது விழா, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கிறது. இந்த விருதின் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவுக்கு இந்தியா சார்பில் ஒவ்வொரு வருடமும் அதிகாரப்பூர்வமாக ஒரு படம் பரிந்துரைக்கப்படுவது வழக்கம்.

இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு, சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.

இந்நிலையில் சர்வதேச பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தின் பெயர் ‘லாஸ்ட் லேடீஸ்’ என மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.