Take a fresh look at your lifestyle.

பரமக்குடியில் பதிந்த பால்ய முகம்!

பேசும் படம்

விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த ‘கமல்-50’ தொடருக்காக பரமக்குடி போயிருந்த போது, அவருடைய பூர்வீக வீட்டுக்கு அருகில் பழமையான ஸ்டூடியோவைப் பார்க்க நேர்ந்தது.

அங்கு பால்யம் மாறாத முகத்துடன் கமல் முதலில் எடுத்த புன்னகையான புகைப்படத்தைப் பார்த்தேன்.

கேட்டதும் நெகட்டிவுடன் இலவசமாகக் கொடுத்து விட்டார் பரந்த மனம் கொண்ட அந்த ஸ்டூடியோ உரிமையாளர்.

சென்னைக்குத் திரும்பி கமலைச் சந்தித்து பழைய புகைப்படங்களை அவரிடம் கொடுத்தபோது, நினைவில் பரமக்குடிக்கே சென்றிருந்தார் அதே குதூகலத்தோடு.

-பத்திரிகையாளர் மணாவின் அனுபவத்திலிருந்து!