Take a fresh look at your lifestyle.

ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் பிரசாந்த் நீல்!

2022-ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் இரட்டை கதாநாயகனாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ பான் இந்தியா படமாக உருவாகி இருந்தது.

இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. விமர்சனங்கள் மத்தியிலும் வசூலிலும் அமோக வரவேற்பைப் பெற்றது.

அதோடு, பல சர்வதேச விருதுகளையும் வாங்கியது. பிலிம் பேர் விருது, தேசிய விருதுகளில் சிறந்த நடிகர், இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் போன்ற  விருதுகளையும் வென்றது. 

அதைத் தொடர்ந்து பான் இந்தியா படத்தில் மீண்டும் நடித்து வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கும் இந்தப் படத்திற்கு ‘தேவாரா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  

இதில் ஜான்வி கபூர் நாயகியாகவும் சைஃப் அலிகான் வில்லனாகவும் நடிக்கின்றனர். இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது.

இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இதன் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.

இந்தப் படத்திற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் இதுவும் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்தப் படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.