Take a fresh look at your lifestyle.

பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ்!

மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ், தமிழில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’ படங்களில் நடித்துள்ளார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடித்துள்ள இவர், இப்போது இந்தியில் அறிமுகமாகிறார்.

இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், அடுத்து உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான த்ரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இதில், பாபி தியோல் நாயகனாக நடிக்கிறார்.

சான்யா மல்ஹோத்ரா, சபா ஆஸாத், ஜோஜு ஜார்ஜ் முக்கிய வேடங்களில். இந்தப் படத்தின் மூலம் ஜோஜு ஜார்ஜ் இந்தியில் அறிமுகமாகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. தமிழில், ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்துள்ள அனுராக் காஷ்யப், விஜய்யின் ‘லியோ’ படத்தில் தலைகாட்டியிருந்தார்.

-நன்றி: இந்து தமிழ் திசை

சான்யா மல்ஹோத்ரா