இந்தியத் திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் திரையிடப்படுகிறது.
இந்த திரைப்பட விழாவில் 20 திரைப்படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது. இதில் தமிழில் இருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் ஒரே படமாக நடிகை நிவேதா தாமஸ் நடித்த ‘35 சின்ன கத காது’ படம் தேர்வாகியுள்ளது.
மலையாளத்தில் 3 படங்கள் தேர்வாகியுள்ளன. அமலா பால் – ஆசிப் அலியின் லெவல் கிராஸ், மம்மூட்டியின் பிரம்மயுகம், பிருத்விராஜின் ஆடுஜீவிதம் படங்கள் தேர்வாகியுள்ளன.
இதேபோல 20 ஆவணக் குறும்படங்களும் தேர்வாகியுள்ளன.
வணிக சினிமா பிரிவில், 12த் பெயில், மஞ்சுமெல் பாய்ஸ், கல்கி 2898 ஏடி, ஸ்வார்கரத், கர்கானு ஆகிய படங்களும் தேர்வாகியுள்ளன.