Take a fresh look at your lifestyle.

ஓ.டி.டி.யில் வெளியானது ஜவான்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி வெளியானது. ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இப்படம் ஒவ்வொரு நாளும் வசூலில் சாதனையை படைத்து வந்தது.

உலகம் முழுவதும் படம் வெளியான 18 நாட்களில் 1004.92 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அட்லீ மற்றும் அனிருத் பாலிவுட்டில் அறிமுகமான முதல் திரைப்படமே 1000 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பது கோலிவுட் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதோடு ஆயிரம் கோடி வசூலைப் பெற்று தந்த முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையும் இயக்குனர் அட்லீக்கு கிடைத்தது.

ஒரே ஆண்டில் பதான் படத்தைத் தொடர்ந்து, ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் இரண்டாவது திரைப்படம் ஜவான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படம் தற்போது ஓ.டி.டி. தளத்தில் (Netflix) வெளியாகி இருக்கிறது.

– தேஜேஷ்