‘ஆபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமான ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நிஜமாகவே ஓர் ‘ஆபூர்வ ராகம்’ தான். 76 வயதிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோவாகவே வலம் வருகிறார்.. வசூலிலும் கொடி கட்டி பறக்கிறார்.
அவரது ‘டாப்- 5 பாக்ஸ் ஆபீஸ்’ படங்கள் குறித்த ஒரு பார்வை:
படையப்பா…
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘படையப்பா’. இதற்கு முன்பு ரஜினி – ரவிக்குமார் ஜோடி ‘முத்து’ என்ற பாக்ஸ் ஆபீஸ் படத்தை கொடுத்திருந்தது. கே.பாலசந்தர் தயாரித்தார். இதன் வெற்றியைத் தொடர்ந்து, தனது திரை உலக நண்பர்களுக்காக ரஜினி தயாரித்த படம் தான் ‘படையப்பா’.
1999-ம் ஆண்டில் வெளியான. இந்த படம் சுமார் ரூ.60 கோடி வசூலித்தது.
சந்திரமுகி..
அண்ணாமலை, வீரா, பாட்ஷா ஆகிய மெஹா ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் ரஜினி மீண்டும் இணைந்த படம் பாபா. ரஜினியின் சொந்தப்படம். யாருமே எதிர்பாராத வகையில் ‘பாபா’ தோல்வியை எதிர்கொண்டது.
ரஜினி சோர்ந்து போனது நிஜம்.
இதனை தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ‘சந்திரமுகி.
சென்னை சாந்தி தியேட்டரில் இந்தப்படம் 800 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ.90 கோடி வரை வசூலித்தது.
சிவாஜி..
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.
ரஜினி- ஷங்கர் கூட்டணி இணைந்த முதல் படம். இந்த படத்தின் வசூல் சுமார் ரூ.150 கோடி.
100 கோடி ரூபாய் வசூலை கடந்த முதல் தமிழ் படம் என்ற பெருமை ‘சிவாஜி’க்கு உண்டு.
எந்திரன்..
சிவாஜி வெற்றியைத் தொடர்ந்து ரஜினி-ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்த படம் ‘எந்திரன். 2010 ஆம் ஆண்டு வெளியானது.
வசீகரன் –சிட்டி ஆகிய இரட்டை வேடங்களில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம், உலகளவில் சுமார் ரூ.290 கோடி வசூலித்தது.
2.0…..
‘எந்திரன்’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினி- ஷங்கர் இணைந்த மூன்றாவது திரைப்படம் ‘2.0’.
2018-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்துடன், இந்தி நடிகர் அக்ஷய குமாரும் நடித்திருந்தார்.
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம்.
இந்தப்படம் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. உலகளவில் சுமார் ரூ.656 கோடி வசூலித்தது.
ஜெயிலர்-2 ..
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 15 நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. நேற்று வரைக்கும் இந்த படம் ரூ.765 கோடி வசூலை கடந்துள்ளது.
“ரஜினியின் ஜெயிலர் -2 திரைப்படம் பிளாக் பஸ்டர் என்றே சொல்ல வேண்டும் – ரூ.ஆயிரம் கோடி வசூலை எட்ட வாய்ப்பு உள்ளது –தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை- இன்னும் 5 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் திரைப்படம் என்ற வரலாற்று சாதனையை ‘ஜெயிலர் -2’ உருவாக்கும்” என்கிறார், தமிழக தியேட்டர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
– பாப்பாங்குளம் பாரதி
#சூப்பர்ஸ்டார் #Superstar #ரஜினிகாந்த் #Rajinikanth #படையப்பா #Padayappa #முத்து #Muthu #சந்திரமுகி #Chandramukhi #அண்ணாமலை #Annamalai #வீரா #Veera #பாட்ஷா #Baashha #கேபாலசந்தர் #KBalachander #ரவிக்குமார் #Ravikumar #பாபா #Baba #பிவாசு #Pvasu #சிவாஜி #Sivaji #எந்திரன் #Enthiran #ஜெயிலர்2 #Jailer2
