Take a fresh look at your lifestyle.

அடுத்து ஜெயிலர்-2!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி ரூ.600 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது.

இந்தப் படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். யோகிபாபு காமெடி வேடத்தில் வந்து ரஜினியை கலாய்க்கும் காட்சிகள் சிரிக்க வைத்தன.

‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்ததால் ஜெயிலர் -2ம் பாகம் உருவாகாது என்று சிலர் பேசத் தொடங்கினார்.

இந்த நிலையில் யோகிபாபு ‘ஜெயிலர்’ 2-ம் பாகம் வரும் என்று உறுதிப்படுத்தி உள்ளார். இதைப் பற்றிப் பேசிய யோகிபாபு, “ஜெயிலர் 2 படத்தில் நான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். புதுவிதமான ஒரு விஷயம் படத்தில் இருக்கும். அது பெரிய அளவில் பேசப்படும்” என்றார். இதன் மூலம் ஜெயிலர் 2 உருவாவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.