Take a fresh look at your lifestyle.

வித்தியாசமாக பட புரமோஷன் செய்த விஷ்ணு விஷால்!

கடந்த 2021ம் ஆண்டு விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் திட்டம் இரண்டு. இத்திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘அடியே’ படத்தை இயக்கினார் விக்னேஷ் கார்த்திக். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் ‘ஹாட் ஸ்பாட்’ என்ற படத்தை இயக்கினார்.

இத்திரைப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சோபியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஒரே படத்தில் நான்கு கதைகளம் அமைந்திருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

புரோமோ வீடியோவில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் நடித்துள்ளனர். விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ள விஷ்ணு விஷால் இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த புரோமோ வீடியோவில், “படம் நன்றாக இல்லையென்றால் செருப்பால் அடிப்பார்கள். நான் இல்லை. மக்கள். பார்ட்2  பரிதாபங்கள் தெரியுமில்லையா. அதனால் கவனமாக எடுங்கள்” என இயக்குநரிடம் பேசுவார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடம்  கவனம் பெற்று வருகிறது.

ஹாட்ஸ்பாட் முதல் பாகத்தின் வெளியீட்டின்போது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், “படம் புடிக்கவில்லை என்றால் செருப்பால்கூட அடியுங்கள்” எனப் பேசியிருப்பார் என்பது நினைவுகூரத்தக்கது.