வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த செம்படம்பர் 5-ம் தேதி வெளிவந்த திரைப்படம் ‘கோட்’. இப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில், ஜெயராம், சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
முதல் முறையாக விஜய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் கேமியோ ரோலில் திரிஷா, சிவகார்த்திகேயன் மற்றும் ஏஐ மூலமாக மறைந்த கேட்பன் விஜயகாந்த்தையும் கொண்டு வந்தனர்.
இதற்காகவே, அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் பட்டியலில் இந்தப் திரைப்படமும் இடம் பெற்றது.
பிரமாண்டமாக இயக்கிய இந்தப் படத்தில் விஜய் அப்பா மற்றும் அவரது மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படம் தற்போதுவரை உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 455 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.