Take a fresh look at your lifestyle.

அதர்மக் கதைகள் – படத்தலைப்புக்கு எதிர்ப்பு!

அறிமுக இயக்குநர் காமராஜ் வேல் தயாரித்து இயக்கியுள்ள படம் அதர்மக் கதைகள். பிக்பேங் மூவீஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம் பழிவாங்குவதை மையமாக கொண்ட ஆந்தாலஜி (anthology) வகை படமாக உருவாகியுள்ளது.

இதில் வெற்றி, சாக்ஷி அகர்வால், அம்மு அபிராமி, திவ்யா துரைசாமி, பூ ராமு, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் Ar. ரெஹானா, Sn.அருணகிரி, ஹரிஷ் அர்ஜுன், சரண் குமார் என 4 இசையமைப்பாளர்களும், கே.கே, M.S.பரணி, ராஜிவ் ராஜேந்திரன், ஜெபின் ரெஜினால்ட் என 4 ஒளிப்பதிவாளர்களும், நாகூரான் ராமச்சந்திரன், சதிஷ் குரசோவா, மகேந்திரன் கணேசன், E. கோபாலகிருஷ்ணன் என 4 எடிட்டர்களும் பணியாற்றியுள்ளனர். Win வீரா, fire கார்த்திக் ஆகியோர் சண்டைப் பயிற்சி அமைத்துள்ளனர்.

அதர்மக் கதைகள் படத்தின் படப்பிடிப்பு சென்னை பெசன்ட் நகர், ஒட்டகப் பாளையம், நெசப்பாக்கம் ஆகிய நடந்து முடிந்துள்ளது.

அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ள நிலையில், இந்தப் படத்தின் தலைப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.