Take a fresh look at your lifestyle.

மக்கள் மனங்களையும் விருதுகளையும் ஆவணப்படங்கள்!

241

முக்கியமான சில நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் நடந்ததை காட்சிகளாலும் வசனங்களாலும் எடுத்துக் கூறுவது ஆவணப்படம்.

இந்த ஆவணப் படங்களை இருபத்தைந்து தலைப்புகளின்கீழ் எடுக்கலாம் என்கின்றனர் துறைசார்ந்த வல்லுநர்கள்.

அதில் செய்திப் படங்கள், வனவிலங்குகள், கல்வி சார்ந்தவை, மருத்துவம், இனவரலாறு, கட்டிடங்கள், வேளாண்மை, சூழலியல், பெண்ணியம், பறவையியல், மலையேறுதல், மெய்யியல், புராணீகம், அறிவியல் மற்றும் செய்தித் தொடர்பூடகங்கள், சுற்றுலா, வரலாறு நினைவிடங்கள், திருவிழாக்கள் இன்னும் எக்கச்சக்கம்.

இந்த வகையில் தற்போது வெளிவந்து புகழ் பெற்ற ஆவணப்படம்,

1.தி எலிபெண்ட் விஸ்பெரஸ்

மனிதர்களுக்கும் விலங்கினங்கலுக்கும் உள்ள தொடர்பினை எடுத்துக் கூறுவதே இந்த ஆவணப்படத்தின் கரு.

இந்த ஆவணப்படத்தில், தாய் யானையை இழந்த ஆதரவற்றக் குட்டி யானைகளுக்கும் அதைப் பராமரிக்கும் பழங்குடி தம்பதியர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியேர்களிடையே உருவாகும் பாசப் பிணைப்பைப் பற்றி விவரிக்கிறது.

இதற்கு சிறந்த ஆவணப்படம் என்ற வகையில் அகாதமி விருது கிடைத்தது. இதற்கு முன் டாக் என்ஒய்சி விருது “மாற்றத்தை உருவாக்குபவர்” என்ற வகையில் இந்த ஆவணப்படம் முன்மொழியப்பட்டது.

2.டு கில் ஏ டைகர்

இந்தியாவில் பிறந்த கனடா நாட்டு இயக்குனர் நிஷா பஹுஜா இயக்கிய ‘டு கில் ஏ டைகர்’ என்ற இந்த ஆவணப்படத்தில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கிறது.

அப்போது அந்த சிறுமியின் தந்தை ரஞ்சித் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலீஸிடம் செல்கிறார். குற்றவாளிகளும் கைது செய்யப்படுகின்றனர்.

ஆனால், காலம் மட்டுமே நீடித்தது, கிராம மக்களும் தலைவர்களும் குற்றச்சாட்டைக் கைவிடும்படி அந்தக் குடும்பத்தை வற்புறுத்துகிறார்கள். இதையடுத்து சட்டப்போராட்டத்தை மையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா மற்றும் லைட்ஹவுஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளையும், பல விருதுகளையும் குவித்தது. இந்நிலையில் 96வது ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலிலும் இப்படம் இடம்பெற்றுள்ளது.

3.ஆல் தட் பிரீத்ஸ்

2022 ஆண்டு சௌனக் சென் இயக்கி வெளியான ‘ஆல் தட் பிரீத்ஸ்’  ஒரு ஆவணப்படம்.

டெல்லியில் வசிக்கும் இரண்டு முஸ்லிம் சகோதரர்களின் கதையைச் சொல்கிறது. இக்கதையில் காலநிலைக் காரணமாக இறந்து கொண்டிருக்கும் கருப்பு காத்தாடி பறவைகளைக் காப்பாற்றுவதே வாழ்க்கையின் நோக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்தப் பறவைகளின் காயங்கள் குணமாகும் வரை கூட்டில் வைத்து பராமரித்து பின் வெளியே விடுகின்றனர். இவ்விருவர்களின் குணம் பார்வையாளர்களை மிக விரைவாக கவர்ந்துள்ளது.

இந்த ஆவணப்படம் 2022 சனவரி 22,  அன்று சன்டான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு உலக திரைப்பட ஆவணப்படப் போட்டியில் கிராண்ட் ஜூரி பரிசை வென்றது இந்த ஆவணப்படம்.

அதோடு, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடல் பிரிவில் திரையிடப்பட்டது. அங்கு கோல்டன் ஐ  விருதை வென்றது. இது பின்னர் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

4.கருவறை

கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்தது ‘கருவறை’ ஆவணப்படம்.

இப்படத்தில் பார்வையாளர்களை மிகவும் பாதித்த படம் ஆகும். இதில் ரித்விகா, மிதுன், வடிவுக்கரசி, அஞ்சனா தமிழ்ச்செல்வி, ரோகிணி ஆகியோர் நடித்திருந்தனர்.

குழந்தையின்மையால் பல லட்சம் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நிலையில் தான், வறுமையினால் பல லட்சம் உயிர்களை கருவிலேயே கலைக்கப்படும் அவலத்தை எடுத்துகிறது.

முதல் குழந்தை இருக்கும் சூழ்நிலையில் 2-வதாக கர்ப்பம் தரிக்கும் நடுத்தர குடும்பத்து பெண்மணி, எப்படி எல்லாம் சமூகத்தின் ஏச்சு பேச்சுகளுக்கு ஆளாகிறார் என்பதை இந்தப் படம் அப்பட்டமாக உணர்த்தியது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இந்த ஆவணப்படத்துக்காக இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5.‘ஸ்மைல் பிங்கி’

ஸ்மைல் பிங்கி என்பது பிங்கி சோங்கரைப் பற்றிய ஒரு ஆவணப்படம் ஆகும்.

இதில் இந்தியாவின் ஏழ்மையான பகுதியில் கடுமையான பிளவுபட்ட உதடுகளுடன் வாழும் ஆறு வயது சிறுமி பற்றியது.

ஒரு நாள் ஸ்மைல் ட்ரெயின் பார்ட்னர் மருத்துவமனையைச் சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் அவரது கிராமத்திற்கு வந்து, ஸ்மைல் ட்ரெயினின் இலவச பிளவு அறுவை சிகிச்சை திட்டத்தைப் பற்றி அவரது குடும்பத்தினரிடம் கூறினார்.

இதனால் பிங்கியின் பிளவை பராமரிப்பதின் பயணமே இந்த ஆவணப்பத்தின் கதை ஆகும்.

சிறந்த ஆவணப்படத்திற்கான 2008 ஆஸ்கார் விருதை வென்றது இந்த ஆவணப்படம்.

6.‘Period End Of Sentence’

டெல்லிக்கு வெளியே உள்ள கதிகேரா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது இந்த ஆவணப்படம்.

இப்படத்தை ஈரானியப் பெண்மணி ராய்கா செஹ்தாப்சி இயக்கியுள்ளார்.

இதில், மாதவிடாய் என்ற ஆழமான, வேரூன்றிய களங்கத்திற்கு எதிராக கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் போராடுகிறார்கள்.

இதில் பல தலைமுறைகளாக, இந்தப் பெண்களுக்கு பேட்களை அணுக முடியவில்லை.

இது உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் பெண்கள் பள்ளியைத் தவறவிட்டது மற்றும் முற்றிலுமாக கைவிடுவதற்கு வழிவகுத்தது.

ஆனால், கிராமத்தில் ஒரு சானிட்டரி பேட் இயந்திரம் நிறுவப்பட்டாதால், பெண்கள் தங்கள் சொந்தமாக பேட்களை தயாரித்து சந்தைப்படுத்த கற்றுக்கொள்கிறார்கள், சமூகத்தின் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் பிராண்டிற்கு “FLY” என்று பெயரிடுகிறார்கள், ஏனெனில் அவர்கள் பெண்கள் “உயர்ந்திருக்க வேண்டும்” என்று விரும்புகிறார்கள்.

2019 அகாடமி விருது பெற்ற ‘நெட்ஃபிக்ஸ்’ ஆவணப்படம். இந்தப் படம் 2018 இல் அமெரிக்கா முழுவதும் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.