Take a fresh look at your lifestyle.

‘ஹைக்கூ’ பட டப்பிங் பணியைத் தொடங்கிய ஏகன்!

யுவராஜ் சின்னசாமி எழுதி, இயக்கியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தை, விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது.

ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். கலை இயக்குநராக பிரேம் பணியாற்றியுள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே, ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் கைப்பற்றியது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கியுள்ளார்.