Take a fresh look at your lifestyle.

வடிவேலுவுடன் மீண்டும் இணையும் சுந்தர்.சி!

‘தலைநகரம்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற நிலையில் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து சுந்தர்.சி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 4’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் சுந்தர் சி-யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகிறது.

‘அரண்மனை 5’ மற்றும் ‘கலகலப்பு 3’ ஆகிய இரண்டில் ஒன்றை மட்டும் அவர் இயக்குவார் என்று கூறப்பட்டது.

இதனிடையே நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தையும் விரைவில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்து அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சுந்தர்.சி மீண்டும் வடிவேலு உடன் ஒரு முழு நீள நகைச்சுவைப் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சுந்தர்.சி மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த ‘தலைநகரம்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அதே போன்று மீண்டும் ஒரு காமெடி படம் வெளிவர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

– தேஜேஷ்.