Take a fresh look at your lifestyle.

சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் ‘தி ஸ்டிங்கர்’!

P.ஹரி எழுதி இயக்கும் ‘தி ஸ்டிங்கர்’ படத்தில் சாக்ஷி அகர்வால், அருண் பிரசாத், ஶ்ரீனிவாசன், தீபிகா, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல நடிகை கதையின் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் வகையை சார்ந்த, மிகவும் வித்தியாசமான கதையம்சம் உள்ள இந்தத் திரைப்படத்தை, தமிழ் சினிமாவில் கண்டிராத வகையில், உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன் CGI மற்றும் VFX வேலைகளை பீனிக்ஸ் ஃபிலிம் மேக்கர் ஸ்டுடியோ மும்பையைச் சேர்ந்த அனுபவமிக்க கலைஞர்களைக் கொண்டு உருவாக்க பொறுப்பேற்றிருக்கிறது.

ஏலியனோடு இணைந்து மற்ற மிருகங்கள் மற்றும் கதைகளங்கள் பார்வையாளர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமையும் என இயக்குநர் P. ஹரி தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கலைஞர்களாக, சபரி ஒளிப்பதிவும், M.S. காமேஷ் இசையும், மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பும், முஜிபூர் ரஹ்மான் கலையும், வீர் விஜய் சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்ற K.H. ஜெகதீஸ் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார்.

அனிமேஷன் வேலைகள் முடிந்தனிலையில் இருக்கும் இத்திரைப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க தயாராக இருக்கிறது.

‘THE STINGER’ வளர்ந்து வரும் தொழில்நுட்ப உதவியுடன் உலகத் தரத்தில் உருவாகும் ஒரு மாறுபட்ட திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.