ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் மூன்றாம் மனிதன். இதில் திரைக்கதை மன்னன் இயக்குனர் கே. பாக்யராஜ் துப்பறியும் அதிகாரியாக பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

ஏற்கெனவே ருத்ரா என்ற படத்தில் புத்திசாலித்தனமாக துப்பறிந்து போலீசுக்கு ஐடியா கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் திருடன் கதாபாத்திரமாக அது அமைந்திருந்தது.
ஆனால், மூன்றாம் மனிதன் படத்தில் எந்த சாட்சியும் இல்லாமல் மர்மமாக நடக்கும் ஒரு கொலையை எப்படி துல்லியமாக பலவித டிடெக்டிவ் வேலைகள் செய்து கண்டுபிடிக்கிறார் என்ற சுவராஸ்யமான துப்பறியும் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால், ஸ்ரீநாத், சூது கவ்வும் சிவக்குமார், பிரணா மற்றும் டாக்டர் ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே புகழ் மதுஸ்ரீ பாடிய பாடல் முதல் பாடலாக வெளியிடப்படுகிறது.
பாடலுக்கான இசையை வேணுசங்கர், தேவ்ஜி ஆகியோர் இசை அமைப்பப்பாளர்களாக அறிமுகமாகின்றனர். பின்னணி இசையை பி. அம்ரிஷ் என்ற புதுமுகம் அமைக்கிறார்.
‘பழகிய நாட்கள்’ என்ற கதையோடு கருத்துள்ள படத்தை இயக்கிய ராம்தேவ், மூன்றாம் மனிதன் படத்தின் கதை, பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.
சஸ்பென்ஸ் த்ரில்லருடன் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்னைகளும் இதில் அலசப்பட்டிருக்கிறது.
மூன்றாம் மனிதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ்த் திரை உலகின் வரலாற்று நாயகர்களான இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், எஸ்.ஏ. சந்திரசேகர், பாரதிராஜா ஆகியோரின் பொற்கரங்களால் வெளியிடப்பட்டது.
