Take a fresh look at your lifestyle.

மலையாள சினிமாவில் கால் பதிக்கும் சேரன்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் சேரன். பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி போன்ற பல வெற்றிப் படங்கள் ரசிகர்களுக்கு கொடுத்தவர். இந்தப் படங்களுக்காக பல விருதுகளையும் பெற்றவர்.

இயக்குநராக இருந்த சேரன் 2004-ல் வெளிவந்த ஆட்டோகிராப் படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி, திருமணம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சேரன், ஜர்னி என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது மலையாள சினிமாவில் கால் பதிக்க உள்ளார். அனுராஜ் மனோகர் இயக்கும் ‘நரிவேட்டா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் சேரன் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சேரனுடன் இணைந்து டொவினோ தாமஸ் முக்கியக்  கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது.

மலையாளத்தில் நடிப்பது பற்றி பேசிய சேரன், முதல் முறையாக மலையாளத் திரைப்படத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அனுராஜ் மனோகரின் கதையும், அதில் எனது பாத்திரமும் என்னை வெகுவாக கவர்ந்தது. டொவினோ தாமஸ் உடன் நடிப்பது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.