Take a fresh look at your lifestyle.

வெளியானது யோகி பாபுவின் ‘சட்னி சாம்பார்’ பர்ஸ்ட் லுக்!

ராதா மோகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள வெப் தொடர் சட்னி சாம்பார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்காக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இத்தொடரில் வாணி போஜன், நிழல்கள் ரவி, ஆர். சுந்தரராஜன், கயல் சந்திரமவுலி, நிதின், சத்யா, சார்லி, குமரவேல், மைனா நந்தினி தீபா சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜேஷ் அசோக் இசையமைத்துள்ளார். பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ள இந்த வெப் தொடர், ஜாலியான, ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகி இருக்கிறது. இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

-நன்றி: இந்து தமிழ்திசை.