இந்தியாவில் ‘BIG B’ என்பது அமிதாப்பச்சனை குறிக்கும். மலையாளத்தில் ‘BIG M’ என்று அழைக்கப்படும் நட்சத்திரங்கள் மம்முட்டியும், மோகன்லாலும்.
ஜுனியர் நடிகர்கள், ஆண்டுதோறும் படை எடுத்து வந்தாலும், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நம்ம ஊரில் ரஜினியும், கமலும் உச்சத்தில் இருப்பது போல், கேரளாவில் பல தசாப்தங்களாக உச்சாணி கொம்பில் இருப்பவர்கள், மம்முட்டியும் மோகன்லாலும்.
இருவருக்கும் தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிகளிலும் ரசிகர் கூட்டம் உண்டு. ஒரு காலக்கட்டத்துக்கு பின் ரஜினியும், கமலும் சேர்ந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஆனால் மம்முட்டியும், மோகன்லாலும் இன்றைக்கும் இணைந்து நடித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதிராத்ரம், அனுபந்தம், வர்தா, கரியில காட்டு போல, அடிமகள் உடமகள், ஹரிகிருஷ்ணன்ஸ், டுவென்ட்டி 20 உள்ளிட்ட படங்கள், மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்து ஹிட் கொடுத்த படங்கள்.
இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர்.
படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?
பசில் ஜோசப். நம்ம ஊர் பாக்யராஜ், மாதிரி. நடிகர் மற்றும் டைரக்டர்.
மலையாளத்தில் அண்மைக்காலமாக பெரிய பெரிய படங்களில் நடித்து வருபவர்.
அண்மையில் வெளியான ‘பிரவீன்கூடு ஷப்பு’ என்ற ‘மிஸ்டரி’ படத்தில் இவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நாயகனாக நடித்திருந்தார். படம் அதிரி புதிரி ஹிட். ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்திலும் இவர் நடிப்புப் பேசப்பட்டது.
அவர் இயக்கிய படங்களில் ‘கோதா’, ‘மின்னல் முரளி’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்த நிலையில் தான், பசில் ஜோசப், நடிப்புக்கு கொஞ்ச நாள் இடைவெளி கொடுத்துவிட்டு, படம் இயக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.
இவர் அடுத்து இயக்கும் படத்தில்தான், மோகன்லாலும் மம்முட்டியும் இணைந்து நடிக்க உள்ளனர்.
இதுகுறித்து பசில் அளித்துள்ள பேட்டியில், “கொஞ்ச காலம் நடிப்பை விட்டுவிட்டு படம் இயக்க இருக்கிறேன் – இரண்டு படங்களுக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன’ என்றார்.
மம்முட்டியும், மோகன்லாலும் இணையும் படத்துக்கான வேலைகளையும் ஆரம்பித்து விட்டேன் – படப்பிடிப்பு எப்போது என்பது முடிவாகவில்லை - அது சரியான நேரத்தில் நடக்கும்” என்கிறார், பசில்.
– பாப்பாங்குளம் பாரதி.
#மம்முட்டி #mammootty #மோகன்லால் #Mohanlal #கேரளா #Kerala #பசில் #Basil #இயக்குநர்_பசில்_ஜோசப் #Director_Basil_joseph #மலையாளம்_படம் #Malayalam_movie #அதிரி_புதிரி #Athiri_puthiri #மிஸ்டரி #Mystery #ஜெய_ஜெய_ஜெய_ஜெய_ஹே #jaya_jaya_jaya_jaya_hey