ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததன் மூலம், இயக்குநர் அட்லீ இந்திய சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
இவர் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளராக மாறவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லீ தனது அடுத்த படத்திற்காக சன் பிக்சர்ஸுடன் இணைய உள்ளார். இந்தப் படத்தில் ‘புஷ்பா’ புகழ் அல்லு அர்ஜுன் அட்லியுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மெகா பட்ஜெட் படத்திற்கு அட்லீக்கு 60 கோடி ரூபாய் சம்பளம்.
இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளும், இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்டது. சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குநராக அட்லீ மாறவுள்ளார். இதன்மூலம் அட்லீ தனது குருநாதர் ஷங்கரை ஓவர்டேக் செய்துள்ளார்.
– தேஜேஷ்