Take a fresh look at your lifestyle.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து வரிசையில் நா.முத்துக்குமார்!

169

கவிஞர் நா.முத்துக்குமாரின் பல பாடல்கள் அதன் வார்த்தைகளையும், கவித்துவத்தையும் வைத்து அது வாலி அல்லது வைரமுத்துவின் பாடல்களாக இருக்கும் என்றே பலர் எண்ணியிருக்கிறார்கள்.

கில்லி படத்துல வர ஓபனிங் பாடலான.. “சூறத்தேங்கா அடிரா அடிரா..” பாடலை நா.முத்துக்குமார்தான் எழுதியிருக்கார். ஜி படத்தில் வரும் “திருட்டு ராஸ்கல்..” அதுவும் இவருடைய பாட்டு தான்.

நம்ம ஜோ – சூர்யாவோட நடிப்பில் வெளிவந்த தெறி ஹிட்டான, “காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற..”, “என்னடி.. என்னடி.. கண்ணடிக்கும் பூங்கொடி.. எம்மனசு ஒன் இடுப்பில் மாட்டிகிச்சுடி….” என சூர்யாவிற்கும்.. ” ஹேய்.. கிறுக்கா.. ஒன் கண்ணு ரெண்டும் பத்திக்கிற வத்திகுச்சிடா..” என ஜோவிற்கும் வரிகள் எழுதியிருப்பவரும் சாட்சாத் நாமு தான்.

அட.. லிங்குசாமி மொத்த வித்தையும் இறக்கின அஞ்சான்ல.. சூர்யா சொந்தக்குரல்ல பாடிருப்பாரே..” ஏக் தோ தீன் சார்..” அது கூட நா.மு. தானுங்க. இதெல்லாம் வாலியோடதுன்னு நினைச்சிகிட்டுருந்தோம்ல.

ஹாரிஸ் இசையமைத்த படங்கள்ல பெரும்பாலும் எழுதியிருக்கார் நா.மு. 

கஜினியில “சுட்டும் விழிச்சுடரே…” பாடலில் “மெல்லினம் மார்பில் கண்டேன்/ வல்லினம் விழியில் கண்டேன், இடையினம் தேடி இல்லை என்றேன்…” – ஒரு நவயுக சிக் ஸ்ட்ரக்ட்சர் பெண்ணை வர்ணிக்க எவ்வளவு டிசன்டான வரிகள்.

உனக்கும் எனக்கும் படத்தில் “பூப்பறிக்க நீயும் போகாதே” பாடல், த்ரிஷா – ஜெயம் ரவி எக்ஸ்பிரஷன்களுக்காக கெறங்கிப் போய் ரசிச்ச பாட்டு. இதையும் நா.மு. தான் எழுதியிருக்கார்.

இந்த மில்லினியம் யூத் பெண்களோட அட்மோஸ்ட் ஃபேவ் பாட்டு ஒன்னு உண்டு. பாரிஜாதம் படத்தில் “உன்னைக் கண்டேனே..” முதலில் ரசிக்கவில்லை எனினும் சீக்கிரமே நம்ம ப்ளே லிஸ்ட்ல தங்கி விட்ட அது கூட நாமு தானாம்.

காதல் பூதமே.. என காதலனை விளிக்கும் பெண். என்ன சிந்தனை பாருங்கள். நம்ம மேடியோட சூப்பர்ஹிட்டு ரன் படத்துல கிக்கான ஓபனிங் சாங்.. “தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சிக்கோ.. இன்னமும் சொல்றேன் தெரிஞ்சிக்கோ.. தட்சணை கொடுத்து தெரிஞ்சிக்கோ.. வாடா.. மச்சான் வயசுக்கு வந்துட்ட..” நா.மு.வோட ஜாலி பக்கங்கள்.

வசீகரா படத்துல பாட்டுக்களையும் அதுல வர ஸ்னேகா & விஜயையும் புடிக்காதவங்க இருக்க முடியுமா?

“ஒரு தடவை சொல்வாயா.. உன்னை எனக்கு பிடிக்குமென்று.. பாடல் விலகி போகும் விஜய் “மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்..” என்க…

“வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம் வலியோடு போராடும் காதல் தானே..” என மிரட்டி காதல் செய்வார் ஸ்னேகா. இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் நாமு.

க்ரீடம் பாடல்கள் க்ளாசிக் ரகம். “நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி/ நீ தூங்கும் நேரத்தில் பார்ப்பேன் அன்பே உன் தலைகோதி/ காதோரத்தில் எப்போதும் உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்/ கையோடு தான் கைக்கோர்த்து தான் உன் மார்புச் சூட்டினில் முகம் புதைப்பேன்…” அக்கம்பக்கம் யாருமில்லா… பாடல்.

கேட்கிற நம்மை “வேறென்ன வேண்டும் உலகத்திலே..” பீல் பண்ண வைத்திருக்கிறார் நாமு.

மதராசப்பட்டினம், தலைவா என டைரக்டர் ஏ.எல்.விஜயுடன் கைக்கோர்க்கும் போதெல்லாம் கவிதை சிக்சர்களை சாத்தியிருக்கிறார் முத்துக்குமார்.

“பூக்கள் பூக்கும் தருணமும்…”, “வாம்மா துரையம்மாவும்..” சுமந்து வந்தது புத்தம்புது வரிகளை எனில்… தலைவாவில், “யாரிந்த சாலையோரம் பூக்கள் வைத்தது..” பாடல் விஜயை இன்னமும் இளமைத் துள்ளலுடன் அவரது ரசிகர்களிடம் சேர்பித்தது.

போக்கிரியில் கூட விஜய்க்கு.. “அப்போ கானா தா புடிக்குமே.. இப்போ மெலடியும் பிடிக்குதே.. குஷி இடுப்ப மட்டும் பாத்தவன்..” என ஜாலியான வரிகளைப் போட்டு “வசந்த முல்லை..” பாட்டை எழுதியிருக்கிறார்.

“தீராத தம்மு வேணும்.. திட்டாத அப்பு வேணும்..” பார்த்திபன் கனவு பட பாட்டு கூட நா.மு. தான் என்றால் நம்பமுடிகிறதா.

ஜாலியான ரொமான்டிக்கான பாடல்களை அதிகம் எழுதியிருந்தாலும் நா.மு. உச்சம் தொட்டதென்னவோ செல்வராகவன் கூட்டணியில் என்பது மறுக்கவே முடியாத உண்மை.

2003 ல் காதல் கொண்டேனில் தொடங்கியது அந்த கூட்டணி. “தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல் தேகமெங்கும் வீசாதா..” என தன்னிடம் நட்பாக பழகும் சோனியாவை காதலியாகவும் கிடைத்திட எண்ணி கதறியவாறு அந்த காரின் மேல் தாவி ஏறி தனுஷ் கூத்தாடியபடி யுவனின் ஆர்பாட்டடமான தாளமெட்டோடு துவங்கும் பாடல்.

அட்டகாசமான ஒருதலைக் காதல் சிட்டுவேஷனுக்கு “இந்தக் கனவு நிலைக்குமா.. தினம் காணக்கிடைக்குமா.. உன் உறவு வந்ததால்.. புது உலகம் திறக்குமா..” என நட்பை விவரித்து “தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே.. வேலி போட்ட இதயம் மேலே வெள்ளைக்கொடியைப் பார்த்தேனே..” என கெஞ்சி…,

“தட்டுத்தடவி இன்று பார்க்கையிலே/ பாதச்சுவடு ஒன்று தெரிகிறதே/ வானம் ஒன்று தான் பூமி ஒன்று தான்/ வாழ்ந்து பார்த்து வீழ்ந்திடலாமே..” என முத்துக்குமார் முடிக்கும் அந்த நொடியில் தனுஷின் குரல் “நா திவ்யாவை காதலிக்க ஆரமிச்சிட்டேன்..” என சைக்கோத்தனமாக திகிலேற்றி படத்தின் வண்ணமே மாறிப்போய் நின்ற தருணம். காதல் கொண்டேனில் நா.மு. எழுதிய மற்றப் பாடல்களும் சளைத்தவை அன்று.

2004 ல் 7 ஜியும் 2006ல் புதுப்பேட்டையும் நா.மு. – செல்வா – யுவன் கூட்டணியின் கொடியை மேன்மேலும் உயரேற்றி பறக்க செய்த படங்கள்.

“நினைத்து நினைத்து பார்த்தேன்..” பாடலில், “பேசிப்போன வார்த்தைகள் எல்லாம்/ உனது பேச்சில் கலந்தே ஒலிக்கும்/ உலகம் அழியும். உருவம் அழியுமா/ பார்த்து போன பார்வைகள் எல்லாம்/ பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்/ உனது விழிகள் என்னை மறக்குமா…”

இந்த வரிகளை பிரிந்து போன காதலிக்காக, மறைந்துவிட்ட நண்பனுக்காக, இழந்த சகோதரனுக்காக என எண்ணி எண்ணி கதறியவர்கள் உண்டு.

“கனா காணும் காலங்கள்..” பாடலில்.. “தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும். தோழமையில் அது கிடையாதே..” என நட்புக்கும் முத்தாய்ப்பு வைத்திருப்பார் வரிகளில்.

மறக்கவியலா கூட்டணி என்பதால் நா.முத்துக்குமாரை பெரும்பாலும் சோகப்பாடல்கள் எழுதுபவர் என்றே வரித்து கொண்டிருக்கிறோம் நாம்.

இதற்கேற்றாற்போல் மகள் பாசத்தை ஒட்டி “ஆனந்த யாழை மீட்டுகிறாய்..” தந்தை பாசத்திற்காக “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..” எழுதி தன்னுடைய முத்திரையை அழுத்தமாகப் பதிய வைத்துச் சென்றிருக்கிறார்.

ஆனால், காதல் பாடல்களிலும் நா.மு. சளைத்தவரில்லை. என்.ஹெச்.-4 படத்தின்.. “யாரோ இவன்..யாரோ இவன்…” கேட்டிருப்பீர்கள் தானே.

“மெதுவாக இடைவெளி குறைகிறதே.. உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே..” என உருகியிருப்பார் காதலில். கேட்கும் நமக்கும் பித்து பிடிக்கும்.

வெப்பம் படப் பாடல்கள் டிவைன். “மழை வரும் அறிகுறி.. உன்னோடு போகும்போது பூப்பூக்கும் சாலை யாவும்.. நீ எங்கே எங்கே என்று கேட்க தோன்றும்…” என்ற இயல்பான சொற்களும் தேனாக இனிக்க செய்தது, நா.மு. அதை அழகான கவிதையாகக் கோர்த்த விதத்தில்.

நா.முத்துக்குமார் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்க வேண்டும்.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார்… என தமிழ் சினிமாவின் அமரத்துவ கவிஞர்களின் வரிசை நா.மு-விற்கு பிறகு இன்னமும் கூட நிரப்பப்படாமலே காத்திருக்கிறது.

நன்றி: சதிஷ்குமார் சுப்பிரமணியம் முகநூல் பதிவு.