Take a fresh look at your lifestyle.

ரசிகர்களிடையே கவனம் பெற்ற ‘அமரன்’ டிரெய்லர்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக  உள்ளது.

இதில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். அண்மையில் இப்படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடலும், இரண்டாவது பாடலான ‘வெண்ணிலவு சாரல்’ பாடலும் வெளியாகி அனைவரது மனதையும் கவர்ந்தது.

தற்போதுவரை இந்த இரண்டு பாடல்களும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

இப்பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தாலேயே பலரும் படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.