Take a fresh look at your lifestyle.

அஜித் எடுத்த படங்கள் இணையத்தில் வைரல்.

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினரை நடிகர் அஜித்குமார் எடுத்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின், 2ம் கட்டப்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களான ரெஜினா, அர்ஜுன், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்டோரை புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

– தேஜேஷ்