Take a fresh look at your lifestyle.

20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் சிம்ரன்!

கடந்த 5-ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த  ‘கோட்’ திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

இதனிடையே விஜய் நடிக்கும் அடுத்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

விஜய்யின் 69-வது படமான இதில் மலையாள நடிகை மமிதா பைஜு, விஜய்யுடன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

90 காலங்களில் ரசிகர்களின் மனங்களை வென்ற விஜய் – சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ‘ஒன்ஸ்மோர்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பிரியமானவளே’, ‘யூத்’, ‘உதயா’ போன்ற சில படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்த நிலையில், 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜயும் சிம்ரனும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.