Take a fresh look at your lifestyle.

பிரீத்தி ஜிந்தாவின் சாயலால் தான் இந்தி சினிமாவுக்கு வந்தேன்!

- நடிகை டாப்ஸி

தமிழ் திரையுலகில் ஆடுகளம் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி ஆரம்பம், காஞ்சனா – 2, அனபெல் சேதுபதி, கேம் ஓவர், வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கிலும் நடித்து வந்த டாப்ஸி, தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டும் நடித்துவந்த அவர், இப்போது கமர்சியல் படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் ஷாருக்கானுடன் ‘டங்கி’ படத்தில் நடித்திருந்த டாப்ஸி, இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலித்தது. அதைத் தொடர்ந்து அக்‌ஷய்குமாருடன் நடித்துள்ள ‘கெல் கெல் மேய்ன்’ இந்தப் படம்  ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகை டாப்ஸி இந்திப் படங்களில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், “நடிகை பிரீத்தி ஜிந்தாவின் சாயல் இருந்ததால் என்னை இந்திக்கு அழைத்தார்கள். அவரின் புதிய பதிப்பாக என்னை நினைத்தார்கள். அதனால்தான் இந்தி வாய்ப்புகள் கிடைத்தன. பிரீத்தி ஜிந்தாவை விவேகமான மற்றும் புத்திசாலித்தனமான நடிகையாக பார்க்கிறேன்.

அவர் சாயலால் இந்தி சினிமாவுக்கு வந்ததால் அவர் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அவரைபோலவே இருக்கக் கடினமாக முயற்சித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.