Take a fresh look at your lifestyle.

மீண்டும் வெளிநாட்டுக்குப் பறந்த சமந்தா!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா, சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயிலிருந்து மீண்டுள்ளதாகக் கூறினார்.

ஆனாலும், சில சிகிச்சைகள் மேற்கொள்வதுடன் மன ஆரோக்கியத்திற்கு யோகாவையும் பயின்று வருகிறார்.

இந்நோய் பாதிப்பால் ஓராண்டுக்கும் மேலாக சினிமாவிலிருந்து விலகியிருந்தவர், தற்போது திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணமும் செய்கிறார்.

தற்போது, அவரே தயாரிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ என்கிற படத்திலும் நடிகர் மம்மூட்டி படத்திலும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பயணம்’ என விமானத்திலிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதனால், சமந்தா மீண்டும் வெளிநாடு சென்றுள்ளார். எந்த நாடு.. என்ன கொண்டாட்டம் என்பது இன்னும் சில நாள்களில் தெரியும்.

-நன்றி: தினமணி.