Take a fresh look at your lifestyle.

கூடுகிற கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது!

நாயகியாக நடித்த இந்திரஜா விஜய்க்கு அறிவுரை

‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்திரஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “கூட்டத்தைப் பார்த்து மட்டும் நம்பிவிடக்கூடாது. ஏனெனில் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறும் என்ற எந்த நிச்சயமும் இல்லை. மக்கள் போடும் அரசியல் கணக்கு வேறு மாதிரியாகத்தான் இருக்கும்.

சிரஞ்சீவியும், பவன் கல்யாணும் கட்சித் தொடங்கியபோது பக்கத்தில் இருந்து பார்த்தவள் நான். அவரை அரசியலில் சரியாக வழிநடத்தக்கூடிய ஆள் இல்லை. விஜய்க்கு இப்போது அதுதான் தேவை. மற்றபடி அவருக்கு வேறு எதுவும் தேவை கிடையாது” என்று கூறியுள்ளார்.