Take a fresh look at your lifestyle.

‘கோட்’ படப்பிடிப்பை முடித்த த்ரிஷா!

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. – Greatest Of All Times) எனப் பெயரிட்டுள்ளனர். இதில், இடம்பெற்ற 2 பாடல்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ மூலம் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், நடிகை த்ரிஷாவும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், கோட் படத்தில் தனக்காக படப்பிடிப்பை த்ரிஷா நிறைவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

#நடிகை_த்ரிஷா #Actress_Trisha #நடிகர்_விஜய் #Actor_Vijay #கோட் #GOAT #ஜெயராம் #Jayaram #பிரபு_தேவா #Prabhu_deva #மோகன் #Mohan #பிரஷாந்த் #Prasanth #வைபவ் #Vaibhav #சினேகா #Snekha #லைலா #Laila #மீனாட்சி_சௌத்ரி #Meenakshi_Sowdri