Take a fresh look at your lifestyle.

படப்பிடிப்பு துவங்கிய நாளிலேயே உருவான சிக்கல்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படமான ‘எல்.ஐ.சி’ பூஜையுடன் நேற்று துவங்கியது.

புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K. விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் E ராகவ் எடிட்டிங் செய்கிறார். உடை வடிவமைப்பை பிரவீன் ராஜா செய்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார். படத்தின் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எல்.ஐ.சி தலைப்பு என்னுடையது என்றும் இதுதெரிந்தும் இந்தத் தலைப்பைப் பயன்படுத்தியுள்ள விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பேன் என்றும் இயக்குனர் S.S.குமரன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு LIC என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இதை அறிந்த திரு விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தப் பெயரை தரக்கோரி தனது மேலாளர் திரு மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார்.

ஆனால், LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்தtஹ் தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன்.

ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை திரு விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார்.

அப்படி இருந்தும் இந்தத் தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.

இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரத்தன்மை கொண்டது. அவரின் இந்தச் செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.

LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை திரு விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இனியும் இச்செயலை திரு விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

S.S.குமரன்