‘பரோஸ்’ படத்தினை விளம்பரப்படுத்த மோகன்லால் அளித்த நேர்காணல் ஒன்றில், ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து பேசியிருக்கிறார்.
அதில் “ரஜினி சாருடன் நடித்தது சந்தோஷம். படமும் எனது கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. என்னிடம் நெல்சன் வந்து கதைச் சொன்னபோது பிடித்திருந்தது, உடனே ஒகே சொல்லிவிட்டேன். கமல் சாருடனும் பணிபுரிந்துள்ளேன்.
ரஜினி சாருடன் நடிக்க ஒரு வாய்ப்பு. அவரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். எனது மாமனாருடைய பல படங்களில் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக தெரிந்திருந்தாலும், அவருடன் பணியாற்ற வாய்ப்பு அமையவில்லை. ‘ஜெயிலர்’ வாய்ப்பு தான் அமைந்தது.
‘பரோஸ் 3டி’ படத்துக்கு அழைத்திருந்தேன். அவர் ஜெய்ப்பூரில் இருப்பதாகத் தெரிவித்தார். இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் எல்லாம் அனுப்பி வைப்பேன். அவர் இப்படத்தைக் காண ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்” என்று மோகன்லால் கூறியுள்ளார்.