Take a fresh look at your lifestyle.

வெளியானது ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட டீசர்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் 2022- ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ‘பிரதர்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி.

இதில் ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சீதா, நட்டி நடராஜ், பூமிகா சாவ்லா பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீனி, காதலிக்க நேரமில்லை, தனி ஒருவன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளார் ஜெயம் ரவி. 

#ஸ்கிரீன்_சீன்_மீடியா #Screen_Scene_Media #எம்_ராஜேஷ் #M_Rajesh #பிரதர்  #Brother #ஜெயம்_ரவி #Jayam_ravi #ப்ரியங்கா_மோகன் #Priyanka_mohan #சரண்யா_பொன்வண்ணன் #Saranya_ponvannan #சீதா #Seetha #நட்டி_நடராஜ் #Nataraj #பூமிகா_சாவ்லா #Boomika_chawla