Take a fresh look at your lifestyle.

‘சாக்லேட் பாய்’ முதல் ‘சார்பட்டா’ வரை: ஆர்யாவைக் கொண்டாடும் இளசுகள்!

2005-ம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பிரகாஷ் ராஜின் ரவுடி மகனாக நடித்த ஆர்யா, தனக்கான கரியரை வளர்க்கத் தொடங்கினார்.

அடுத்ததாக ஒரு கல்லூரியின் கதை, உள்ளம் கேட்குமே போன்ற படங்களின் மூலம் உருகி உருகி காதலிக்கும் காலேஜ் பாயாக வலம் வந்த ஆர்யா, பட்டியல், வட்டாரம், ஓரம் போ உள்ளிட்ட படங்களில் கேங்ஸ்டராக நடித்து அசத்தி இருப்பார்.

இப்படி ஆர்யாவின் கெரியர் கிராஃப் வளர்ந்து வரும் நிலையில், அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது தான் நான் கடவுள் படம்.

பாலா இயக்கத்தில் அகோரியாக நடித்த ஆர்யா, தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்தார்.

காதலில் விழுந்த டீனேஜ் பாயாகவும், கேங்ஸ்டராகவும் நடித்த ஆர்யா காமெடி ஜானரிலும் அசத்தத் தொடங்கினார்.

சந்தானத்துடன் இணைந்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

இதற்கிடையே ஏ.எல். விஜய் இயக்கத்தில் எமி ஜாக்சனுடன் ஆர்யா நடித்த மதராசப்பட்டிணம் படம், அவரின் கரியரின் திருப்புமுனை படமாக அமைந்தது.

நான் கடவுள் படத்திற்கு பிறகு மீண்டும் பாலாவுடன் இணைந்த அவன் இவன் படத்தில் நடித்து ஸ்கோர் செய்தார்.

மாதவனுடன் இணைந்து வேட்டை படத்தில் நடித்து ஆக்‌ஷனில் அசத்தி இருப்பார்.

அஜித்துடன் இணைந்து ஆரம்பம் படத்தில் நடித்த ஆர்யா நயன்தாரா உடன் இணைந்து ராஜா ராணி படத்தில் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்தார்.

தொடர்ந்து கஜினிகாந்த், காப்பான், மகாமுனி, எனிமி படங்களில் நடித்த ஆர்யாவுக்கு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படமும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து ஆர்யாவின் நடிப்பில் அடுத்த ஆண்டு சார்பட்டா 2, மிஸ்டர் எக்ஸ், சங்கமித்ரா உள்ளிட்ட படங்கள் வெளிவர உள்ளன.

இப்படித் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக வலம் வரும் ஆர்யாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Thanks: abp nadu