Take a fresh look at your lifestyle.

வகுப்பவன் அதுபோல் வாழ்வதில்லை!

-நினைவில் நிற்கும் வரிகள்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா

(ஆடி…)

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா – கண்
மூடினால் காலில்லா கட்டிலடா

(ஆடி…)

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

(ஆடி…)

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

(ஆடி…)

வகுப்பான் அது போல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை….

(ஆடி…)

-1965-ம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளிவந்த ‘நீர்க்குமிழி‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கவிஞர் சுரதா.