Take a fresh look at your lifestyle.

கோவா திரைப்பட விழாவில் காந்தி டாக்ஸ்!

இயக்குநர் கிஷோர் பி பெலேகர் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், விஜய் சேதுபதி – அரவிந்த் சாமி நடித்த ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா 2023-இல் திரையிடப்பட்ட முதல் அமைதி திரைப்படம்.

விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிளாக் காமெடியை அடிப்படையாகக் கொண்டது ‘காந்தி டாக்ஸ்’ என்ற அமைதிப் படம்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை. இப்போது கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா 2023 இல் திரையிடப்பட்ட முதல் அமைதி திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படம் டார்க் காமெடியை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஒரு கதாபாத்திரம் தனது நிதித் தேவைகளைக் கையாளும் போது, அந்தக் கதாபாத்திரத்தின் பணத்தேவை மற்றவர்களின் வாழ்க்கையில் எப்படி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை படம் விவரிக்கிறது.

படத்தின் இயக்குநர் கிஷோர் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நாடக ஆசிரியர், இயக்குநர் மற்றும் நடிகராக தனது ஒப்பற்ற திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘மிஷன் வாஸ்கோடா காமா’ என்ற தலைப்பில் அவர் சிறந்த நாடகத்திற்காக ஒரே ஆண்டில் 25 விருதுகளையும் வென்றுள்ளார்.

மேலும், மராத்தி படங்களான ‘யேடா’, ‘சா சசுச்சா’ மற்றும் ஃபீமெல் எம்பவர்மெண்ட் ஆன்ந்தாலஜி ‘R-E-S-P-E-C-T’ ஆகியவற்றையும் கிஷோர் இயக்கியுள்ளார்.

இயக்குநர் கிஷோர், ​​”மௌனப் படம் எடுப்பது சாதாரணமானது அல்ல. இது ஒரு கதை சொல்லும் வடிவம். உரையாடல் இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்துவது பயமாக மட்டுமல்ல, சுவாரஸ்யமாகவும் சவாலாகவும் இருந்தது. சுமார் 20 ஆண்டுகளில் எனக்கு ‘காந்தி டாக்ஸ்’ நிறைவான மற்றும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என்றார்.