தமிழ் சினிமாவில், ரசிகர்களுக்கு நடிகைகள் பார்ப்பதற்கு நமது பக்கத்து வீட்டு பெண் போல் இருந்தால் மிகவும் பிடித்துவிடும். அது போன்று பார்த்தவுடன் பிடித்து போன நடிகை தான் வாணி போஜன்.
சீரியலிகளில் நாயகியாக நடித்து வந்த இவர் அதன் மூலம் கிடைத்த புகழால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இது போன்று சீரியல்களில் வரும் நாயகிகளில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார்கள். அந்த பட்டியலில் வாணி போஜனும் ஒருவர்.
தமிழில் 2020-ம் ஆண்டு வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மூலம் அறிமுகமானார் வாணி போஜன். முதல் படமே இவரை திரும்பி பார்க்க வைத்தது. பாத்திரம் சிறியதாக இருந்தாலும் அவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
முதல் படமே ஹிட் கொடுத்த காரணத்தினால் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இவரை தேடி வர ஆரம்பித்தன. ட்ரிபிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ் மற்றும் செங்களம் என மூன்று வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.
அடுத்தடுத்து லாக் அப், லவ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மற்ற நடிகைகள் போல் இல்லாமல் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன் என தனக்கு என்று ஒரு தனி சட்டம் வைத்து இருக்கிறார். இதை அவரே பல முறை பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், பெண்களை எப்படி சிலர் பார்க்கிறார்கள் என்பது குறித்து பேசியிருந்தார்.
“பெண்களைத் தவறாகப் பார்க்கும் நபர்கள், சத்தியமாக திருந்த மாட்டார்கள். வயதான நபர்கள் பைக்கில் சேலைக்கட்டி செல்வார்கள். நான் பல சிக்னலில் பார்த்து இருக்கிறேன். அங்கிருக்கும் அனைவரின் பார்வையும் அவர் மேல் தான் இருக்கும். அது ஏன் என்றுதான் எனக்கு தெரியவில்லை. சேலைக்கட்டி இருந்தால் உடனே அப்படிப் பார்க்கிறார்கள்.
அது நல்லதா, இல்லை கேட்டதா என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் தான் சொல்கிறேன் வயதான பெண்களை கூட அவர்கள் விட மாட்டார்கள். வேறு மாதிரி தான் பார்க்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
நன்றி: இந்துஸ்தான் தமிழ்




