Take a fresh look at your lifestyle.

பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் RT4GM!

வெற்றிக்கூட்டணியான மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனி நான்காவது முறையாக இணைந்துள்ளனர், இப்படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் RT4GM படத்தை, பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. திரையில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கிறார்.

ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், பூஜையுடன் படம் பிரம்மாண்டமாக துவங்கியது.

நடிகரும் திரைப்படத் இயக்குநருமான செல்வராகவன், தெலுங்கு மொழியில் இப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

RT4GM திரைப்படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

திரைத்துறையின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் கைவண்ணத்தில் உயர்தரமான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது.

முன்னணி இசையமைப்பாளர் S தமன் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவி தேஜாவுடன் தமனுக்கு இது 12வது படம்.

பிகில், மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், சமீபத்தில் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஜவான் படத்தினை காட்சிப்படுத்திய திறமைமிகு ஒளிப்பதிவாளரான GK விஷ்ணு,  RT4GM இன் மாபெரும் உலகத்தை காட்சிப்படுத்தவுள்ளார்.