இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் ப்ரியா ஆனந்த் நடித்த திரைப்படம் அமிலம். அந்தப் படம் ஜியோமாமி (jiomami) சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பூமிகா, இது வேதாளம் சொல்லும் கதை மற்றும் நவராசாவில் சித்தார்த் நடித்த இன்மை ஆகிய படைப்புகளின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பாராட்டி திரையுலக நண்பர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.


