இதோ மசாலா கலந்த மக்கள் கொண்டாட வேண்டும் என்று எடுக்கப்படும் படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மக்களின் வலியை பேசும் படங்களும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது.
அப்படி மக்களின் வலியை பேசிய திரைப்படங்களில் ஒன்று ஜெய் பீம். TJ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம். நேரடியாக ஓடிடியில் வெளிவந்த இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளது. ஜெய் பீம் படத்தில் இடம்பெறும் சண்டை காட்சியை தான் படத்திலிருந்து நீக்கியுள்ளனர்.
படத்தில் எந்தவிதமான கமர்ஷியல் காட்சியும் இருக்க கூடாது என்பதற்காக இந்த காட்சியை படத்திலிருந்து இயக்குனர் நீக்கினாரா அல்லது படத்தின் நீளத்தை குறைக்க தூக்கினாரா என தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் இந்த காட்சியை வைத்து இருக்கலாம் என கூறி வருகிறார்கள்.