அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார்.
‘தியாகராஜா டாக்கீஸ்’ தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தென்காசியில் தொடங்கியது.
இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்சித் சிங், IAS., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேமராவை இயக்கி வைத்தார்.
தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
தென்காசியில் தொடங்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு 23 நாட்கள் நடைபெறும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார்.
விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை ஜெயச்சந்திரனும், படத்தொகுப்புப் பணிகளை வி. ஜே. சபு ஜோசப்பும் மேற்கொள்கின்றனர்.
தியாகராஜா டாக்கீஸ் – இயக்குநர் சிவ பிரசன்னா – ஜெய் ஆகியோர் கூட்டணியில் ஹாரர், காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடமும் திரையுலக வணிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
