அறிமுக நாயகன் அருண்குமார், நாயகியாக அனுஸ்ரீ நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ‘காந்தாரா’ புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க, கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் படம் ‘நடு நாடு’.
சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் முழுக்க முழுக்க கடலூர் மாவட்டத்தில் மற்றும் சென்னை சுற்றியுள்ள இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
கல்வியில் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படத்தில் வெற்றிகளைக் குவித்த இசையமைப்பாளர் பரணி அவர்கள் இசையமைக்க, ஒளிப்பதிவு செந்தில் மாறன் கவனிக்க, படத்தொகுப்பு r.k. செல்வன்.
படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
