ரைசா வில்சன் கதையின் நாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்.
‘ஆண்மை தவறேல்’ துருவா, அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விளம்பரப் படங்களை இயக்கிய மிலோ இதை இயக்குகிறார்.
ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படத்தப் பற்றிப் பேசிய ரைசா வில்சன், “கதைக்குள் இன்னொரு கதை என்கிற விதமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் நான் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறேன்.
ஆக்ஷன், த்ரில்லர், சயின்ஸ் பிக்ஷன் கலந்து இந்த படம் உருவாகி இருக்கிறது.
இதுவரை நான் இதுபோன்ற கதையில், கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. கேரளாவில் உள்ள மறையூர் காடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
அனுமதி கிடைப்பதற்கே சிரமமான சந்தன மரக்காடுகளுக்குள் படப்பிடிப்பு நடத்தினார்கள்.
இதில், ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளேன்” என்றார்.