பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் மிருணாள் தாக்கூர், தென்னிந்திய சினிமாவிலும் தடம் பதித்து வருகிறார்.
குறிப்பாக தெலுங்கு சினிமாக்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அவரை, தமிழ் சினிமாவில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. முன்னணி நடிகரின் படத்தில் அவர் ஜோடி சேர இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாக்கூர், வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
“நாம் எதை, எதையோ மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான மகிழ்ச்சி என்பது இருப்பதை இல்லாதவர்களிடம் கொடுப்பதில் தான் இருக்கிறது.
பெரியளவில் செய்யாவிட்டாலும், முடிந்தளவு வறுமையில் இருப்போருக்கு உதவி செய்யலாம்.
கர்மா மீது எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது.
செய்யும் உதவிகள் நமக்கு பலன் தருமா? என்பதில் எனக்கு எதிர்பார்ப்பு இல்லை.
ஆனால், செய்யும் உதவி யாருக்காவது மகிழ்ச்சி தந்தால் போதும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிருணாள் தாக்கூரின் இத்தகைய மனம் திறந்த பேச்சு, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
