Take a fresh look at your lifestyle.

விமர்சனங்களைக் கடந்து போகக் கற்றுக்கொண்டேன்!

நடிகை ஹீமா குரேஷி வருத்தம்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி, தமிழில் ரஜினிகாந்துடன் ‘காலா’ அஜித்குமாருடன் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘டாக்சிக்’ படத்தில் யாஷ் உடன் நடித்துள்ளார்.

இதற்கிடையில் உருவக்கேலியால் தான் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் தனது தன்னம்பிக்கை உடைந்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய ஹீமா குரேஷி, “உருவக்கேலியால் நான் மிகவும் நொந்து போய்விட்டேன். எனது தோற்றத்தை வைத்து என்னை கேலி செய்யும் போக்கு தொடருகிறது.

இதனால் என் தன்னம்பிக்கையும் உடைகிறது. சில காலம் நடிப்பதில் இருந்தும் ஒதுங்கி இருந்தேன்.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன்.

உரிய மனநல ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் ஏற்று, அதன்படி செயல்படுகிறேன்.

என்னை பற்றிய விமர்சனங்களைப் பார்த்து சிரிக்கக் கற்றுக் கொண்டு வருகிறேன்.

அதனை கடந்து போகப் பழகி வருகிறேன். இப்போது என் கவலை குறைந்திருக்கிறது.

தயவுசெய்து யாரையும் உருவக்கேலி செய்யாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.