அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘கான் சிட்டி’.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார்.
இதில் அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
இதன் டீஸர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி ஜூன் 26-ல் இப் படம் வெளியாகிறது.