Take a fresh look at your lifestyle.

திரையில் வில்லன், நிஜத்தில் ஹீரோ: நானா படேகரின் இன்னொரு முகம்!

காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்தவர் இந்தி நடிகர் நானா படேகர். ஆனால், நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவராகத் திகழ்கிறார்.

மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015-ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வெடித்தன. ஆடுமாடுகள் செத்து மடிந்தன. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

விவசாயிகளின் தற்கொலை நானா நானா படேகரின் மனதை வெகுவாகப் பாதித்தது. சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து நாம் என்னும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.

முதல் நாளே அறக்கட்டளைக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் திரண்டது. இரவு பகலாக விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கிகினார்.

மும்பை, தானே, புனே, நாக்பூர், அவுரங்கபாத் நகரங்களில் ‘நாம்‘ அறக்கட்டளை எட்டு வருடங்களாக இயங்கிவருகிறது.

இந்த அறக்கட்டளை மூலம் கணவரை இழந்த பெண்களுக்கு மறு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது, இளம் பெண்களுக்கு சுய தொழில் கற்றுக் கொடுப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற பல்வேறு அறப்பணிகளில் ஈடுபட்டுவருகிறது.

திரையில் வரும் வில்லன்கள் எல்லாம் ஹீரோக்கள் இல்லை. ஹீரோக்கள் எல்லாம் வில்லன்கள் இல்லை என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் நானா படேகர்.