ஆகாஷ் பாஸ்கரன் – அதர்வா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘இதயம் முரளி’.
நடிகர் முரளியின் பட்டப் பெயரான ‘இதயம் முரளி’ என்ற இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கயாது லோஹர், பிரீத்தி முகுந்தன், ஏஞ்சலின், பிரக்யா நக்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
பல்வேறு மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வரும் அதர்வா ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்திற்குப் பிறகு தற்போது புதுமுக இயக்குநருடன் இணைந்ததாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
தணல் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்ஷன், எம். ஜான் பீட்டர் தயாரிக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.