ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 69வது படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
கடந்த அக்டோபர் 4-ம் தேதி இப்படத்தின் பூஜைத் தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
அதன்பின், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தில் விஜய்யுடைய கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் சிறப்பு வழக்குக்காக மீண்டும் காவலதிகாரியாக மாறுவதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் ஏற்கனவே போக்கிரி, ஜில்லா, தெறி ஆகிய படங்களில் காவலதிகரியாக நடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.